முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய நாடுகள் சபை தினம் கடைபிடிப்பு

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      உலகம்
UNO-2023 04 06

Source: provided

ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை தினம் (ஐ.நா. தினம்) நேற்று கொண்டாடப்பட்டது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக அமைதிக்காக 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒன்றை நிறுவின. ஐ.நா. சாசனம் 1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டின் முடிவில் கையெழுத்திடப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 24-ம் தேதி ஐ.நா. தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் ஐ.நா. உறுப்பு நாடுகளிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையில், பல்வேறு உறுப்பு நாடுகளில் அந்ததந்த நாட்டு தேசியக் கொடிகளுடன் ஐ.நா. சபையின் கொடியையும் ஏற்றி வைத்தார்கள். இதுதவிர, பல்வேறு சர்வதேச மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய முயற்சிகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதித்து தூதரக அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்சிகளும் நடத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து