முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டக் அவுட்டில் மோசமான சச்சின் சாதனையை சமன் செய்த ரோகித்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      விளையாட்டு
24-Ram-52

Source: provided

புனே: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

7 விக்கெட்டுகள்... 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதுமின்றி 0 ரன்னில் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரது விக்கெட்டை டிம் சவுதி வீழ்த்தினார்.

இது முதல் முறை...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை நியூசிலாந்து வீரர் டிம் சவுதியிடம் பறிகொடுப்பது இது 14-வது முறையாகும். அதன் தொடர்ச்சியாக இந்திய மண்ணில் ரோஹித் சர்மா டக் அவுட் ஆவது 9 ஆண்டுகளுக்கு பின்னர் இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் டக் அவுட்டான ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டானவர் என்ற வரிசை 34 முறை டக் அவுட்டான இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.

11 முறை டக் அவுட்...

மேலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக முறை டக் அவுட்டான கேப்டன் என்ற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையையும் சமன் செய்துள்ளார். தோனி இதுவரை 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

அதிக முறை டக் அவுட்:

1) ஜாகீர் கான் - 43 முறை.

2) இஷாந்த் சர்மா - 40 முறை.

3) விராட் கோலி - 38 முறை.

4) ஹர்பஜன் சிங் - 37முறை.

5) அனில் கும்ப்ளே - 35முறை.

6) ரோகித் சர்மா - 34* முறை.

7) சச்சின் டெண்டுல்கர் - 34முறை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து