முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரை சமன் செய்த இந்தியா

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      விளையாட்டு
24-Ram-58

Source: provided

இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஹாக்கி தொடர் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலாவது போட்டி முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா தரப்பில் சுக்ஜீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் தலா 2 கோல்களும் அபிஷேக் ஒரு கோலும் அடித்தனர்.

கம்மின்ஸ் பகிர்ந்த போட்டி

இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடிய வீரர்களின் மறக்கமுடியாத ஆட்டங்கள் பற்றி தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “2004 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்கள் விளாசியதை தனது வாழ்வில் மறக்க முடியாத சிறப்பான ஆட்டம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபாவில் நடந்த டெஸ்ட்டில் ரிஷப் பந்தின் 89 ரன்கள், 2001 ஆம் ஆண்டு விவிஎஸ் லக்‌ஷ்மண் விளாசிய 281 ரன்கள், அடிலெய்டில் விராட் கோலியின் 141 ரன் ஆட்டங்களை தவிர்த்துவிட்டு சச்சினின் ஆட்டம் சிறப்பானது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “241* ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவரை யாராலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. இந்திய அணி 705* ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த போதும் அவர் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். அது சலிப்பாக இருந்தது. இருந்தாலும் அது மறக்கமுடியாத ஆட்டம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து