முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் விரைவாக 1,000 ரன்கள்: ஜெய்ஸ்வால் புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

புனே : இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட்டில் விரைவாக 1,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இளம் இந்தியர்... 

இந்திய அணி நியூசிலாந்து உடன் 2ஆவது டெஸ்ட் போட்டியில் புணேவில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் நியூசி. 259 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 45.3 ஓவரில் 156க்கு ஆல் அவுட்டானது.இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஓராண்டில் விரைவாக 1000 ரன்களை எடுத்த இளம் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

வெங்சர்கார்... 

22 வயதாகும் ஜெய்ஸ்வால் இதுவரை 13 போட்டிகளில் 1,295 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 23 வயதில் 1979ஆம் ஆண்டு திலிப் வெங்சர்கார் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். இந்தாண்டு அதிக டெஸ்ட் ரன்கள் அடித்தவர் பட்டியலில் ஜோ ரூட்டுக்கு (1,305) அடுத்து ஜெய்ஸ்வால் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு, ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் 1,007 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 59.23 என்பது குறிப்பிடத்தக்கது. 2 சதம், 6 அரைசதங்கள் இதில் அடங்கும். இதற்கு முன்பு சச்சின் ஓராண்டில் அதிகபட்சமாக 1,562 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

விரைவாக ஆயிரம் ரன்கள்

1) சச்சின் - 1,562 (2010).

2) சேவாக் 1,462 (2008).

3) ஜெய்ஸ்வால் - 1, 007 (2024).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து