முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிக்காக போராடுகிறேன்: வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Priyanka-Rahul 2024-10-22

Source: provided

புதுடெல்லி : நீதிக்காகவும் போராடுவது எனது வாழ்வின் முக்கியமாக இருக்கிறது என்றும் எனக்கு வயநாடு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வயநாடு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். 

கடந்த 23-ம் தேதி வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வயநாடு சிறந்த இயற்கை வளங்களை கொண்டுள்ளது. உங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். 

மக்கள் பிரதிநிதியாக இந்த பயணம் எனக்கு முதல் பயணம் ஆகும். ஆனால் மக்களுக்காக போராடுவது முதல் முறை அல்ல. பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும், சுதந்திரமாக வேலை செய்யவும் நான் போராடுவேன்.  

ஜனநாயகத்திற்காகவும், நீதிக்காகவும் போராடுவது எனது வாழ்வின் முக்கியமாக இருக்கிறது. இந்த போரை உங்கள் ஆதரவுடன் முன்னெடுத்து செல்வதற்கு நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நீங்கள் உங்கள் எம்.பி.யாக என்னை தேர்வு செய்தால் நான் நன்றியுடன் இருப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து