முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Rahul 2024-10-26

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்டார். அப்போது அந்த சலூன் கடைக்காரரிடம் பேசி அவரது குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தார்.

இதை வீடியோவாக பதிவு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ளார்.  அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

எதுவும் மீதி இல்லை. அஜித் பாயின் இந்த வார்த்தைகளும், கண்ணீரும் இந்தியாவில் இன்று கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரின் கதையை சொல்கிறது.

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள், தச்சர்கள் வரை வருமானச்சரிவு மற்றும் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரின் சொந்த கடை, வீடு மற்றும் சுயமரியாதை போன்ற கனவுகள் திருடப்பட்டு உள்ளன.

எனவே வருமானத்தை அதிகரிக்கும், சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் நவீன தீர்வுகள் மற்றும் புதிய திட்டங்கள்தான் தற்போதைய தேவை. திறமைக்கு ஏற்ப தகுதியைப் பெற்று, கடின உழைப்பின் ஒவ்வொரு அடியும் வெற்றியின் ஏணியில் ஏற்றி விடும் சமுதாயம் தேவை. இவ்வாறு ராகுல் காந்தி அதில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ராகுல் காந்தியின் நடவடிக்கையை பாராட்டி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து