முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிர தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Rahul-Karkee 2024-10-26

மும்பை, மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடி விவாதித்த பின்பு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலில் 48 பேரின் பெயரினை வெளியிட்டிருந்தது. தற்போது இரண்டாவது பட்டியலில் 23 பேரை அறிவித்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் இதுவரை 71 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் கேதரின் மனைவி அனுஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (என்.டி.சி.சி.பி) ஊழலில் தண்டனை பெற்று 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தார். 

அவர் நாக்பூர் மாவட்டத்தின் சாயோனர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜல்னா தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. கைலாஷ் கோராண்டியல் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 25 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தவரும், முன்னாள் துணை சபாநாயகருமான மூத்த காங்கிரஸ் தலைவர் வசந்த் புர்கே ரலேகான் (யவத்மால்) தொகுதியில் போட்டியிடுகிறார். 

கடந்த 2019-ம் ஆண்டு தோல்வியை தழுவிய சிவாஜிராவ் மோகே தனது மகன் ஜித்தேந்ராவுக்கு வழிவிட்டு அவரை ஆர்னி தொகுதியில் நிறுத்துகிறார். மும்பையில், காலு பதேலியா கிழக்கு காந்திவளியிலும், கணேஷ் யாதவ் கோலிவாடா தொகுதியிலும், யஷ்வந்த் சிங் சார்கோப் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து