முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ. 25-ம் தேதி தொடங்கி டிச.20-ம் தேதி வரை பார்லி. குளிர்கால கூட்ட தொடரை நடத்த திட்டம்: மத்திய அரசு தகவல்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Parlimanet 2024-06-30

புது டெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர்  25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. 

அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 தினங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்திருந்தது. இதை அமல்படுத்த எந்தக் காலக்கெடுவையும் இக்குழு நிர்ணயிக்கவில்லை.

இதை அமல்படுத்த ஒரு செயலாக்கக் குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்திருந்தது. எதிர்வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்திய அரசியலமைப்பின் 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நவம்பர் 26-ம் தேதி கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து