முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      உலகம்
Whit haues 2023-08-29

வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை(டி.எச்.எஸ்.) நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கொலம்பியா, ஈகுவேடார், பெரு, எகிப்து, மொரிடேனியா, செனெகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு தனி விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், அமெரிக்காவில் குடியேற சட்டப்பூர்வமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து