முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈரான் வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      உலகம்
Suicide 2023 04 29

தெஹ்ரான், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

 ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. சில மணி நேரம் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்த நிலையில், தாக்குதல் முடிந்துவிட்டதாகவும் தங்களுடைய விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் தங்கள் நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. அதேவேளையில், இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சரியான முறையில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து