முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டானா புயல் காரணமாக மேற்குவங்கத்தில் பலி எண்ணிக்கை 4 ஆனது

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Puyal-ciam 2024-09-03

Source: provided

கொல்கத்தா : டானா புயலால் மேற்ெ வங்காளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கக்கடலில் கடந்த 21 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 23ம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'டானா' என்று பெயரிடப்பட்டது. டானா புயல், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன் காலை தீவிர புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையைக் கடந்தது.

டானா புயலால் மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மின் கம்பியை தொட்டத்தில் சந்தன் தாஸ்(31) என்ற குடிமை தன்னார்வலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் போலீஸ் குழுவுடன் வெளியே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஹவுரா முனிசிபல் கார்ப்பரேஷனின் ஊழியர் ஒருவர் தண்டிப்பாராவில் தண்ணீர் தேங்கிய சாலையில் இறந்து கிடந்தார். நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமாவில் ஒருவரும், மற்றொருவர் தெற்கு கொல்கத்தாவின் பபானிபூர் பகுதியில் உயிரிழந்தாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து