முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சான்ட்னெர் மாபெரும் சாதனை

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      விளையாட்டு
New-Zealand 2023-12-10

Source: provided

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தியா 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் தனி ஆளாக போராட மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. 

கில் தனது பங்குக்கு 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களில் மீண்டும் சான்ட்னெர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை சான்ட்னெர் படைத்துள்ளார். இந்திய அணி தற்போது வரை 179 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.

__________________________________________________________________________________

மேக்ஸ்வெல் பகிர்ந்த சம்பவம்

2017 ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்திய முன்னாள் வீரர் சேவாக் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அணியின் தேர்வு பற்றிய முடிவுகளை எடுப்பதற்காக எங்களுடைய பயிற்சியாளர்களை வாட்ஸப் குரூப்பில் சேர்ப்பது நல்ல முடிவாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதற்கு ஒப்புக்கொண்ட அனைவரும் தங்களுடைய அணியை குரூப்பில் பகிர்ந்தனர். சேவாக் பகிரவில்லை. அந்த செயல்முறையின் இறுதியில் அணியை தாம் தேர்ந்தெடுப்பேன் என்று சேவாக் தெளிவாக சொல்லி விட்டார். நாங்கள் அப்போது களத்திலும் வெளியையும் தோற்றுக் கொண்டிருந்தோம். சேவாக் ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அர்த்தமில்லாத முடிவுகளை எடுத்தார்.

அந்த ஐ.பி.எல். தொடரில் எங்களுடைய கடைசி போட்டி புனேவில் நடைபெற்றது. அங்கே ஈரமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த நாங்கள் 73க்கு ஆல் அவுட்டானோம். அத்தோடு கதை முடிந்தது. அன்றைய நாள் இரவில் நான் தாமாக சென்று செய்தியாளர்களை சந்தித்தேன். ஆனால் சேவாக் அவர் செல்வதாக சொன்னார். அது முடிந்த பின் அணியின் பேருந்தில் ஏறிய பின் எங்களின் வாட்ஸப் குரூப்பில் நான் வெளியேற்றப்பட்டதை அறிந்தேன். அதனால் என்ன நடக்கிறது? என்று ஆச்சரியப்பட்டேன். பின்னர் ஓட்டலை அடைந்த நேரத்தில் எனது தொலைபேசி ஒலித்தது. அதில் உங்களுடைய ஆட்டத்தில் பெரிய ஏமாற்றம் கிடைத்ததாக சேவாக் என் மீது கோபப்பட்டார். கேப்டன் பொறுப்பை ஏற்றதற்காக என்னை குற்றமும் சாட்டினார் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து