முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. மாநாட்டில் அ.தி.மு.க.வை நடிகர் விஜய் விமர்சிக்காதது ஏன்? - எடப்பாடி பழனிசாமி பதில்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
EPS 2023 03 27

Source: provided

சென்னை : அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சென்னை மாநகரத்தில் 9 பூங்காக்கள் உள்ளன. அங்குள்ள விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார். 

அப்போது அவரிடம் விஜய் மாநாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் மாநாடு நடத்துகின்றனர். த.வெ.க. சார்பில் மாநில மாநாட்டை அக்கட்சியின் தலைவர் நடத்தியிருக்கிறார். இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்றுள்ளனர் என்றார்.

அப்போது, அ.தி.மு.க.வை விஜய் பெரிய அளவில் விமர்சிக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் பகிர்வு என்று பேசியிருக்கிறார். வருங்காலத்தில் அ.தி.மு.க. விஜய்யுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்த கொள்கையின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கிறார். 

அதில் இது சரியா, தவறா என்று நாம் கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் இப்போதுதான் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முதல் மாநில மாநாட்டை நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். கூட்டணி என்பது அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு அமைக்கப்படும். அ.தி.மு.க. சிறப்பாக செயல்பட்டிருப்பதால்தான் நடிகர் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை என்று தெரிவித்தார். 

பா.ஜ.க., தி.மு.க.வை விஜய் விமர்சித்து பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு, விஜய் ஒரு கட்சியின் தலைவராகி விட்டார். அந்தக் கட்சிக்கு என்ன கருத்து இருக்கிறதோ, அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. 

கொள்கை இல்லாத கட்சிகள்தான் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஒத்த கொள்கையுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருப்பதாக முதல்வரும் கூறுகிறார், அந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் ஒரே கொள்கைகளைக் கொண்ட கட்சியா? அப்படியென்றால், அவர்கள் ஒரே கட்சியாக இருக்கலாமே. தனித்தனி கட்சிகள் தேவையில்லையே.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் அமைக்கப்படும். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை எங்களுக்கென்று கொள்கை இருக்கிறது. கூட்டணி என்பது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். கொள்கை என்பது நிலையானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து