முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தோல் நோய் பிரச்சனைகள் வராமல் தடுப்பது எப்படி?

  1. கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய தோல் சம்மந்தமான நோய்கள் பற்றியும் அது வராமல் தடுப்பது எப்படி என்பதையும் காணலாம்.
  2. பனிக் காலத்தில் வரும் வேர்வைக்கும் வெயில் காலத்தில் வரும் வேர்வைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
  3. பனிக் காலத்தை விட வெயில் காலத்தில் வரும் வேர்வை நமது உடலில் உள்ள உப்பு சத்துக்களை அதிக அளவில் வெளியேற்றுகிறது.
  4. வேர்வை காரணமாக நமது உடலில் அரிப்பு ,படர்தாமரை மற்றும் பல தோல் நோய்கள் ஏற்படுகிறது இவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
  5. வெயில் காலத்தில் நமது உடலை சுத்தமாகவும்,தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
  6. ஆண்களும் சரி,பெண்களும் சரி தங்களது மறைமுகமான பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
  7. குளிக்கும் போதும் சோப்புகளையும் உப்பு நீரை பயன் படுத்தியும் நன்றாக குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  8. உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதால் அழுக்குகள் நீங்குவதுடன் வியர்வை நாற்றமும் வராமல் தடுக்க முடியும்.
  9. வெயில் காலத்தில் நம் குளிக்கும் நீரில் இரண்டு முதல் ஐந்து சொட்டுகள் எலுமிச்சம் பழ சாறையும் ஒரு கைப்பிடி அளவு
  10. கல் உப்பையும் போட்டு நன்றாக கலந்து குளித்து வந்தால்,நமது உடலில் வியர்வை நாற்றம் வராமலும் தடுக்க முடியும்.
  11. எலுமிச்சம் பழ சாறு நமது உடலில் ஏற்படக்கூடிய தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
  12. கடலைமாவில் எலுமிச்சம் பழ சாறு 10 சொட்டுகள் ஊற்றி கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து விட்டு பின்னர் நம் வழக்கமாக பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி குளித்து வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
  13. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சந்தனத்தை பன்னீரில் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு காலை குளிக்க வைத்தால் உடல் சூடு குறைவதுடன் குழந்தைகள் உடலில் கொப்பளங்கள் வராமலும் தடுக்க முடியும்.
  14. இதை வெயில் காலத்தில் தான் பயன் படுத்த வேண்டும் பனி காலத்தில் படுத்தினால் சளி தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
  15. குழந்தைகளுக்கு சந்தனம் பூசி குளிக்க வைத்தால் சளி பிடிக்கும் என்பதால் தான் உடன் பண்ணீரை கலந்து பூசிவருவது நல்லது, மேலும் சளி தொல்லையும் இருக்காது.
  16. நமக்கட்டியை பன்னீரில் குழைத்து தடவி வந்தால் வேனல் கட்டிகள் குறையும்.
  17. கோடைகாலத்தில் வேர்வை காரணமாக ஏற்படக்கூடிய அரிப்பு படர்தாமரை மற்றும் பல தோல் நோய்கள் வராமல் தடுக்க நமக்கட்டியை பன்னீரில் குழைத்து தடவி வரலாம்.
  18. கோடைகாலத்தில் இவை அனைத்தையும் பயன் படுத்தியும் தோல் நோய்கள் வந்தால் ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago