முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிவாளரிடம் ரூ. 1.60 கோடியை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது: ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      சினிமா
Ganguwa 2024-11-08

Source: provided

சென்னை : ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது 

தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர், பலரிடம் பல கோடிகளை பெற்று பல்வேறு தொழில்களை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்தும் விட்டார். 

இதையடுத்து அர்ஜூன்லாலிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க சொத்தாட்சியரை (மாவட்ட நீதிபதியை) நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜுன் லாலுக்கு பல கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  நாளை(இன்று) புதன் கிழமைக்குள்  20 கோடி ரூபாயை ஞானவேல் ராஜா செலுத்த வேண்டும்.  அவ்வாறு பணத்தை செலுத்தவில்லை என்றால் கங்குவா படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கங்குவா படத்தை வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. இதன்படி ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மும்பையை சேர்ந்த பியூல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, சூர்யாவின் மூன்று படத்திற்கு இந்தி டப்பிங் உரிமையை ரூ.6.6 கோடிக்கு பெற்ற அந்நிறுவனத்திற்கு, படம் கொடுக்காததால், 5 கோடி ரூபாயை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திருப்பி கொடுத்துள்ளனர். 

ஆனால், பாக்கி ரூ.1.6 கோடி ரூபாய் அளிக்காத காரணத்தால் பியூல் டெக்னாலஜி பட நிறுவனம் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அமர்வு, பாக்கி ரூ.1.6 கோடி ரூபாய் பணத்தை ஐகோர்ட்டு தலைமை  பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து