முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      சினிமா
Sharukh-Khan 2024-11-12

Source: provided

ராய்பூர் : பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை சத்தீஸ்கரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய ஒருவர், பிரபல நடிகர் ஷாரூக்கானை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், அதை தடுக்க வேண்டுமானால் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார்.  இந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து, பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் ஷாரூக் கானுக்கு அதே போல் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, பாந்த்ரா போலீசார் துரிதமாக விசாரணையை தொடங்கினர்.

எங்கிருந்து செல்போன் அழைப்பு வந்தது என்பதை சைபர் க்ரைம் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த வக்கீல் முகமது பைசான் கான் என்பவரின் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, பைசான் கானை விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்திருந்தனர். ஆனால் அவர் வராமல் மறுக்கவே, நேரடியாக ராய்பூருக்கே பாந்த்ரா போலீசார் சென்று முகமது பைசான் கானை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடத்திய போது, தமது செல்போன் தொலைந்து விட்டதாகவும், இது குறித்து கடந்த 2-ம் தேதி உள்ளூர் போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து