முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024      தமிழகம்
Archana-Patnaik 2024-11-12

சென்னை, தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். இதன்மூலம், மாநிலத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாகு, தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்ட அவர், தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கை தலைமைத் தேர்தல் அலுவலராக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அர்ச்சனா பட்நாயக் யார்? 

ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2002-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கோவை, உதகை மாவட்டங்களின் ஆட்சியர், தோட்டக்கலைத் துறை ஆணையர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் கடைசியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக இருந்தார். அர்ச்சனா பட்நாயக், தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆவார். 1948-ஆம் ஆண்டு தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதுமுதல், தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக வட மாநிலங்களைச் சேர்ந்த தமிழக பிரிவு ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளே பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து