முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு எதிரொலி: தலைநகர் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் :9-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-11-18

புதுடெல்லி, தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 457 ஆக அதிகரித்தது. இந்நிலை யில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 481 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே கிராப் திட்டத்தின் 1, 2, 3 நிலை கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 4-வது நிலை கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று முதல் டெல்லியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம் அரசின் உத்தரவுப்படி 10 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.

புதிய கட்டுப்பாடுகளின் படி அனைத்து வகையிலும் அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடர்ந்த பனி மூட்டம் காரணமாக விமான செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருகையில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு விமான அட்ட வணையை அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து