முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      இந்தியா
UP 2024-11-18

Source: provided

லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யாகூப் மன்சூரி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த அறைக்குள் நுழைந்து ஒன்றல்ல... இரண்டல்ல.. 7 குழந்தைகளை மீட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அதேப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தனது இரட்டைப் பெண் குழந்தைகளை அவரால் மீட்கமுடியாமல் போனதுதான் துயரம்.

ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சிக்கி இதுவரை 11 குழந்தைகள் பலியாகின. தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்கும்போது, தீயில் பலியான குழந்தைகளைப் பார்த்து நெஞ்சம் உடைந்துபோயிருக்கிறார் யாகூப். தனது குழந்தைகளுக்கும், பலியான மற்ற குழந்தைகளுக்கும் நியாயம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரு சில நாள்களுக்கு முன்புதான், இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகியிருந்த யாகூப் மன்சூரி, தனது குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயிலில் தங்கியிருந்த போதுதான், அந்த அறைக்குள் தீப்பற்றியிருக்கிறது.

பலரும் என்ன செய்வது என்று யோசிப்பதற்குள், அந்த அறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று, தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அறைக்குள் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் ஒவ்வொருவராகத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்து, அங்கிருந்தவர்களிடம் கொடுத்தார். ஆனால், தனது குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பகுதிக்குள் பயங்கரமாக தீப்பற்றி எரிந்ததால், எனது மகள்களை மட்டும் காப்பாற்றமுடியவில்லை என்றும், அவர்களை நான் இழந்துவிட்டேன் என்றும் கூறி கதறுகிறார். அவரது குழந்தைகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து