எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டக் பிரெஸ்வேல் (வயது 34) இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது கோகைன் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை எந்த வித கிரிக்கெட் போட்டியும் விளையாட முடியாத வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. முதலில் இவருக்கு 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து விளையாட்டு நேர்மை ஆணையம் தீர்ப்பு வழங்கியது. எனினும் இவர் போட்டி தொடங்குவதற்கு முன்பே கோகைன் உட்கொண்டது தெரிந்ததால் தண்டனை காலத்தை ஒரு மாதமாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இவரது இடைநீக்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கியது. இதன் விளைவாக, பந்து வீச்சாளர் ஏற்கனவே தனது தடை காலத்தை அனுபவித்துவிட்டார், இதனால் அவர் எந்த நேரத்திலும் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
____________________________________________________________________________________________
ஜூரல் விளையாட அறிவுறுத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் வேண்டும் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது., அவரால் சிறந்த பேட்ஸ்மேனாக எளிதாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். எதிர்புறம் விக்கெட்டுகள் இழந்து அணி தடுமாறியபோது அவர் இங்கே மிகவும் பொறுமையுடன் அழுத்தமான சூழலில் தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அழுத்தத்தின் கீழ் நிறைய வீரர்கள் தடுமாறியதை நீங்கள் பார்த்தீர்கள். அழுத்தத்தின் கீழ் அந்த வீரர்கள் பதற்றமாக விளையாடியதையும் நீங்கள் பார்த்தீர்கள்.
ஆனால் இந்த பையன் அது போன்ற சமயங்களில் மிகவும் பொறுமையுடன் பதறாமல் நின்றார். இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில் கூட விக்கெட்டுகள் விழுந்தபோது அவர் நிதானமாக விளையாடி அசத்தினார். அந்த வகையில் இங்கே விளையாடுவதற்கு அவர் நல்ல முறையில் தயாராக இருப்பதாக நான் பார்க்கிறேன். அப்படி இருந்தால் நீங்கள் அவருக்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம். இங்கே 80, 60 ரன்கள் அடித்தது அவருக்கு சிறப்பாக விளையாடுவதற்கான நல்ல தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். நல்ல பார்மில் இருக்கும் அவர் பந்தை தடுத்து நிறுத்துபவர் மட்டுமல்ல. நல்ல ஷாட்டுகளை வைத்துள்ளார். பின்வரிசை வீரர்களுடனும் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பது முக்கியமாகும். அப்படித்தான் இந்தியா தங்களுடைய சமநிலையை சரி செய்ய பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
____________________________________________________________________________________________
மும்பை அணி அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான (20 ஓவர்) சையத் முஷ்டாக் அலி கோப்பையின் 17-வது சீசன் வரும் 23-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் கலந்துகொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி 'குரூப் பி' -ல் இடம்பெற்றுள்ளது. இந்த தொடருக்கான தமிழக அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. தமிழக அணிக்கு ஷாருக்கான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சாய் சுதர்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான மும்பை அணி குரூப் - இ யில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அஜிங்க்ய ரகானே, பிரித்வி ஷா, ஷர்துல் தாகூர், சித்தேஷ் லாட் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணி விவரம்; ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஜெய் பிஸ்டா, அஜிங்க்ய ரகானே, சித்தேஷ் லாட், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சாய்ராஜ் பாட்டீல், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஷம்ஸ் முலானி, ஹிமான்சு சிங், தனுஷ் கோட்யான், ஷர்துல் தாக்கூர், மொஹித் அவஸ்தி, ராய்ஸ்டன் டயஸ், ஜூன்ட் கான்
____________________________________________________________________________________________
ஆஸி. பயிற்சியாளர் முடிவு
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, சௌதி அரேபியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டேனியல் வெட்டோரி ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்பதற்காக சௌதி அரேபியா செல்லவிருக்கிறார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி சிறப்பாக செயல்படுவதற்கு நாங்கள் மிகுந்த ஆதரவாக இருக்கிறோம். ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள புறப்படும் முன்பாக பெர்த் டெஸ்ட் போட்டிக்கு தேவையான பயிற்சியினை அவர் அணிக்கு அளித்துவிடுவார். ஐபிஎல் மெகா ஏலம் முடிந்தவுடன் மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து, பார்டர் - கவாஸ்கர் தொடர் முழுவதும் பயிற்சியளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டியில் டேனியல் வெட்டோரிக்குப் பதிலாக அந்த இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய பயிற்சியாளர் லாச்லன் ஸ்டீவன்ஸ் தற்காலிகமாக அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-11-2024.
18 Nov 2024 -
தியாகத்தின் உச்சம்: வ.உ. சிதம்பரனாருக்கு கமல்ஹாசன் புகழாரம்
18 Nov 2024சென்னை, தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார் என்று அவரது நினைவு நாளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு : கோவில் நடை அடைப்பு - பரிகார பூஜை
18 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
-
ஆராய்ச்சி கல்வி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் : போராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்
18 Nov 2024சென்னை : ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
18 Nov 2024சென்னை : தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
சவேரியார் பேராலய திருவிழா: டிசம்பர் மாதம் 3-ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை
18 Nov 2024கன்னியாகுமரி : சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச., 3-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இந்திய செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது
18 Nov 2024வாஷிங்டன் : உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியி
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழலா? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
18 Nov 2024புதுக்கோட்டை : '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
குண்டர் சட்டத்தில் அஸ்வத்தாமன் கைது: தமிழக அரசு, சென்னை கமிஷனருக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
18 Nov 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு செ
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்
18 Nov 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யா
-
போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு எதிரொலி: சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம்?
18 Nov 2024சென்னை. போக்குவரத்து நெரிசல் அதிரிப்பு காரணமாக சென்னையில் நூற்றுக்கணக்கான பஸ் நிறுத்தங்கள் இடம் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
வாத்தியார் படத்தின் டீஸர் வெளியீடு
18 Nov 2024நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Nov 2024புதுடெல்லி : சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தெலுங்கானாவில் சம்பவம்: கல்லூரி மாணவருக்கு மொட்டை போட்ட பேராசிரியர் மீது வழக்கு
18 Nov 2024கம்மம், தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
-
பேரிடர் சமயங்களில் மறு சீரமைப்பை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் : 16-வது நிதிக்குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Nov 2024சென்னை : பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட 16-வது நிதிக்குழு பரிந்துரைக்க வேண
-
தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு எதிரொலி: தலைநகர் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் :9-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு
18 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
-
தமிழகத்தில் தஞ்சை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Nov 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை:உள்துறை அமைச்சர அமித்ஷா தலைமையில் உயர்மட்ட கூட்டம்: 3 முக்கிய வழக்குகள் என்.ஐ.ஏ.க்கு மாற்றம்
18 Nov 2024இம்பால், மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர அமித்ஷா தலைமையில் நேற்று 2-வது நாளாக உயர்மட்ட கூட்டம் நடந்தது.
-
பெங்களூரு தலைமையகத்தை மாற்ற அமேசான் திடீர் முடிவு?
18 Nov 2024பெங்களூரு : உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது.
-
செக்கிழுத்த செம்மலை போற்றுவோம்: வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
18 Nov 2024சென்னை, வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் செக்கிழுத்த செம்மலை போற்றுவோம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
-
காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்
18 Nov 2024புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
-
சிறையில் தூக்கமின்றி தவிப்பு: நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு
18 Nov 2024சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு
18 Nov 2024ரியோ டி ஜெனீரோ, நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு நேற்று காலை சென்று சேர்ந்த
-
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு
18 Nov 2024சென்னை : தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு 480 ரூபாய் அதிகரிப்பு
18 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து நேற்று விற்பனையானது.