முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பார்லி.யில் அமளியில் ஈடுபடுகின்றனர் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Modi 2024-11-25

Source: provided

 

புதுடெல்லி: அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்த பிரதமர் மோடி, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, அடுத்த மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தது. பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. 

இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரையொட்டி பாராளுமன்றம் வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாராளுமன்ற விவாதத்தில் அதிகமான எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். நாளை (இன்று) 75-வது அரசியலமைப்பு தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்படும். அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது, இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆக்கப்பூர்வமாக நடக்கும் என நம்புகிறேன். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். அவையில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை வாக்காளர்கள் பலமுறை நிராகரித்துள்ளனர். மக்கள் அவர்களை (எதிர்க்கட்சிகளை) மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இரவு பகலாக கடினமாக உழைக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தின் நிபந்தனை. மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்களும், சக ஊழியர்களின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியவர்களும், அவர்களின் உணர்வுகளை மதிக்காதவர்களும் சபையில் பணியை சுமூகமாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விரும்புகின்றனர்.

பாராளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் என்றுமே பேசியதில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குழைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் எப்போதும் செயல்பட்டதில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றனர். இன்று உலகம் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது, பாராளுமன்றத்தின் நேரத்தைப் பயன்படுத்துவதும், சபையில் நமது நடத்தையும் உலக அளவில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மரியாதையை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago
View all comments

வாசகர் கருத்து