முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருட்கள் கடத்தல்: மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Ship

Source: provided

 

புதுடெல்லி: அந்தமான் பகுதியில் 6 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த இந்திய கடற்படை இது தொடர்பாக மியான்மரை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தமான் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அந்தமான் கடற்பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீன்பிடி படகு ஒன்றில், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

அந்த மீன் பிடி படகை சுற்றி வளைத்த, கடற்படையினர் படகில் சோதனை செய்தனர். அப்போது 2 கிலோ எடை கொண்ட சுமார் 3 ஆயிரம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 டன் எடை கொண்ட போதைப்பொருட்களையும் இந்திய கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 

இந்திய கடற்படை பறிமுதல் செய்த போதைப்பொருட்களில் இதுவே மிக அதிகபட்சம் என தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து கடற்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது., பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 டன் போதைப்பொருட்களும் இந்தியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மியான்மர் நாட்டை சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்றார். 

அந்தமான் நிக்கோபார் தீவை ஒட்டிய கடற்பகுதியில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்படுவது இது முதல் முறையல்ல. 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு கப்பல்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற போது, இதேபோன்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் குஜராத் கடற்பரப்பில் சுமார் 700 கிலோ போதைப்பொருளை கடற்படை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago
View all comments

வாசகர் கருத்து