முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி விவகாரத்தில் பிரதமர் விளக்கமளிக்க பார்லி.மக்களவையில் காங். நோட்டீஸ்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2024      இந்தியா
Modi-2023-09-21

Source: provided

 

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கோரி பார்லி. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்  நோட்டீஸ் அளித்துள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, அடுத்த மாதம் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். 

டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது. இதில் முக்கியமாக, கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பை சந்தித்த இந்த மசோதா, பாராளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மசோதாவை தவிர பஞ்சாப் கோர்ட்டுகள் (திருத்தம்) மசோதா, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல்கள் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே அதானி விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து காற்று மாசு குறித்து விவாதிக்க காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் நோட்டீஸ் அளித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago
View all comments

வாசகர் கருத்து