முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்: கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கும் : தி.மு.க. எம்.பி. கனிமொழி கருத்து

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Kanimozhi 2023-10-13

Source: provided

புதுடெல்லி : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. எம்.பி கனிமொழி கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது. மாநில கட்சிகளை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மசோதா வலுவிழக்கச் செய்யும் .

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் செலவினம் குறையும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தி.மு.க.வும், தி.மு.க. தலைவரும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் . மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பினாலும், தி.மு.க.வின் எதிர்ப்பு உறுதியானது. என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து