முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: 4-வது இடத்திற்கு நியூசி. முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      விளையாட்டு
New-Zealand 2024-02-16

Source: provided

துபாய், : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புதிய பட்டியல்...

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் முதல் 3 தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) அணிகள் தொடர்கின்றன.

4-வது இடத்திற்கு...

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து இலங்கை (45.45 சதவீதம்) 5ம் இடத்திலும், இங்கிலாந்து (43.18 சதவீதம்) 6ம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) அணிகள் உள்ளன.

புதிய பட்டியல்:

1) தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்).

2) ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்).

3) இந்தியா (57.29 சதவீதம்).

4) நியூசிலாந்து (48.21 சதவீதம்).

5) இலங்கை (45.45 சதவீதம்).

6) இங்கிலாந்து (43.18 சதவீதம்).

7) பாகிஸ்தான் (33.33 சதவீதம்)..

8) வங்காளதேசம் (31.25 சதவீதம்)

9) வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து