முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க 6-வது நாளாக தடை

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      தமிழகம்
Kurtalam 2024-11-04

தென்காசி, பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக நேற்று தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறைகள், மரக்கிளைகள் உள்ளிட்டவை அடித்து வரப்பட்டன. இதனால் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், தடுப்பு கம்பிகள் ஆகியவை சேதமடைந்தன.

இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு ஆண் யானையின் சடலம் அருவிக்கரையில் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் சற்று தணிந்தது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் குற்றால அருவியில் முகாமிட்டு, சேதங்களை சரிசெய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக நேற்றுதடை நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஐந்தருவி மற்றும் புலியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து