முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்சங் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளா்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      தமிழகம்
CPIM 2024-07-14

Source: provided

சென்னை : சாம்சங் நிறுவனத்தை கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்த உள்ளதாக  ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

சாம்சங் நிறுவன தொழிலாளா்களின் காலவரையற்ற போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சாம்சங் நிறுவனத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சுமாா் 37 நாள்கள் அவா்களுடன் பல்வேறு வகையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சுமுக தீா்வு காணப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் சாம்சங் நிறுவனம் ஈடுபடுவதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். முந்தைய போராட்டத்தில் ஈடுபட்ட பின், மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்களில் பெரும்பான்மையினருக்கு ஏற்கெனவே அவர்கள் பணியாற்றி வந்த பணி வழங்கப்படவில்லை என்றும், 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் தரப்பிலிருந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சாம்சங் நிர்வாகம் மீது அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே, நிர்வாகத் தரப்பிலிருந்து வரும் அழுத்தம் தாங்காமல் அந்நிறுவனத்தைச் சார்ந்த ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சி.ஐ.டி.யு. தொழிலாளா் சங்கத் தொழிலாளர்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி, சாம்சங் தொழிற்சாலை வாளகத்தினுள்ளே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் அடையாளப் போராட்டமாக இது அமையுமென்றும் 1,500 தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் சி.ஐ.டி.யு. தரப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து