முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியது: காங்கிரஸ் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Manish-Tiwari 2024-02-18

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார்.

‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி பேசியதாவது: “ஏழாவது அட்டவணையை கடந்து அடிப்படை கோட்பாடுகள் உள்ளன. ஒருசில அரசியல் கோட்பாடுகள் அவையில் திருத்தங்களுக்கு மீறியதாகவும். நமது இறையாண்மை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு என்பது மாற்றப்படக் கூடாது.

சட்டத்துறை அமைச்சர் கொண்டு வந்துள்ள மசோதாக்கள் சட்டம் இயற்றும் ஆற்றலுக்கு மீறியதாகும். நமது அரசியல் சாசனத்தில் மாநில காலகட்டத்தை எப்படி தேசிய அரசியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும். இது அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரானது.

இந்திய அரசியல் சாசனத்தில் மாநிலங்களின் சரிசமமான அதிகாரத்தை கொண்டுள்ளது. தேசிய அரசியலுடன் கொண்டு வர முடியாது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பாகும்.

ஆகையால், மத்திய அதிகாரம் என்பது அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது. வெளிப்படைத்தன்மைக்கு எதிரானது. இந்த அவையின் அதிகாரத்துக்கு மீறிய சட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து