முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று சீனா பயணம் : முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      உலகம்
Ajith-Doval 2024-09-08

Source: provided

பீஜிங் : இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அஜித் தோவலின் சீன பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய மற்றும் சீன நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளுக்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சீன தலைநகர் பீஜிங் நகருக்கு சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிழக்கு லடாக்கில் இரு நாடுகளின் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், எல்லை பகுதியில் கூடுதலாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால், 4 ஆண்டுகளாக இருதரப்பு உறவுகளுக்கான பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருந்தது. அதன்பின்னர் இருதரப்பிலும் ராணுவ அதிகாரிகள் அளவிலான உயர் மட்ட குழுவினர் கலந்து கொண்டு, பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, படைகள் வாபஸ் பெறப்பட்டன.

இந்த சூழலில், அஜித் தோவலின் இந்த சீன பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தில், இருதரப்பு உறவுகளை மீண்டும் கட்டமைப்பதற்காக, பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து