முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப 269 பேர் ஆதரவு - 198 பேர் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Parliament-1

Source: provided

புதுடெல்லி : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப 269 பேர் ஆதரவாகவும் 198 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதற்கு முதல் முறையாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் பொருட்டு அதுதொடர்பான இரண்டு மசோதாக்கள் நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார். மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதாவும் வழிவகை செய்யும்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவையில் கூச்சல் ஏற்பட்டது.

இறுதியாக, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.

இதையடுத்து இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வழக்கமாக குரல் வாக்கெடுப்பு நடத்தும் நிலையில் நேற்று மக்களவையில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

எதிர்க்கட்சிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு செலுத்த விரும்பாதவர்கள் வாக்குசீட்டுகளில் வாக்களிக்கலாம் என அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இந்த வாக்கெடுப்பில் மசோதாவை கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப 269 பேர் ஆதரவாகவும் 198 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து