முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா: தி.மு.க., காங்., உள்ளிட்ட 9 கட்சிகள் கடும் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி : ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு  தி.மு.க., காங்., உள்ளிட்ட 9 கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் பிரிவு) சிபிஎம், மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

சமாஜவாதி எம்.பி. தர்மேந்திர யாதவ் மக்களவையில் பேசுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் அரசமைப்புக்கே எதிரானது. இந்த மசோதா அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கே எதிரானது. நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது” என்று பேசினார்.

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மக்களவையில் பேசும்போது, ”ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க முடியுமா?” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து