முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      இந்தியா
Mamata-1

Source: provided

புதுடெல்லி : தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பற்றி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.

பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய மந்திரி சபை ஒப்புதல் கொடுத்தது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த அரசியல் சாசன திருத்த மசோதா பாராளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை, பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், "இது, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல். ஒரே நாடு, ஒரே தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி?. பாஜகவினர் அரசியலமைப்பு கட்டமைப்பை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இது நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரும் முயற்சி.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தேர்தல் சீர்திருத்தத்துக்கான திட்டம் அல்ல, ஒற்றை மனிதனின் ஆசைகளையும், கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான திட்டம். இந்த மசோதா ஏற்கப்பட்டால், தேர்தல் ஆணையம்தான் இந்தியாவின் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். இது தேர்தல் ஆணையத்துக்கு கட்டற்ற அதிகாரத்தை அளிக்கிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து