முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகல்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      விளையாட்டு
Afghan 2024-05-04

Source: provided

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் ஆடி வருகிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் விலகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முகமது இஷாக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட மாட்டார்.

_______________________________________________________________________________________

ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் நேற்றைய ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார்.

அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அவரது காயம் குறித்து கண்டறிய ஸ்கேன் எடுக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமடைய நீண்ட காலம் ஆகும் என தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

_______________________________________________________________________________________

பும்ராவுக்கு ஆலன் பார்டர் புகழாரம்

பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, என்னால் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் நான் பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆனாலும், பும்ரா மிகவும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார். அவர் எப்போதாவதுதான் விக்கெட் எடுக்காமல் இருப்பார்.

அவர் மிகவும் வித்தியாசமானவர். விக்கெட் வீழ்த்தும் எல்லா நேரத்திலும் அவர் சிரிக்கிறார். அவரால் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும். அவரைப் போல் யாரையும் நான் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________________________

வில்லியம்சன் தொடர்ந்து 5 சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்டில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் சாதனையை அந்த அணி சமன் செய்தது. இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு கிரிஸ்ட்சர்ச்சில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய வில்லியம்சன், ஜேக்கப் பெத்தேல் பந்து வீச்சில் சிக்சர் விளாசி தனது 33-வது சதத்தை 137 பந்துகளில் பூர்த்தி செய்தார். அவர் இந்த மைதானத்தில் அடித்த 7-வது சதம் இதுவாகும். இதில் 5 சதங்களை தொடர்ச்சியாக எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு மைதானத்தில் தொடர்ச்சியாக 5 டெஸ்டில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 

_______________________________________________________________________________________

மே.இ.தீவுகள் அணிக்கு பயிற்சியாளர் 

 வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக செயின்ட் வின்சென்ட்டில் நடந்த காலாண்டு செய்தியாளர் மாநாட்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் இயக்குனர் மைல்ஸ் பாஸ்கோம்ப் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதான டேரன் சமி, கடந்த 2023 ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒயிட்-பால் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக 2014 மற்றும் 2016 -ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற ஒரே கேப்டன் எனும் சாதனையை டேரன் சமி நிகழ்த்தி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து