முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலோ ஆனை தவிர்த்த இந்தியா: டிராவை நோக்கி பிரிஸ்பேன் டெஸ்ட்

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2024      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆகாஷ் - பும்ரா ஜோடி பாலோ ஆனை தவிர்த்ததால் டிராவை நோக்கி பிரிஸ்பேன் டெஸ்ட் செல்கிறது. இந்திய அணி இன்னும் ஒருவிக்கெட் கையில் உள்ள நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை இன்று தொடங்குகிறது. நேற்று 4-ம் நாள் முடிவில் இந்தியா 252 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது.

445 ரன்களுக்கு...

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கேஎல் ராகுல் 33 ரன்களுடனும் ரோகித் 0 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம்... 

தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. ரோகித் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் 16 ரன்னில் வெளியேறினார்.

ஜடேஜா அரைசதம்...

பொறுப்புடன் ஆடிய ஜடேஜா அரை சதம் கடந்தார். சிராஜ் 1 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஜடேஜா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 77 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

பும்ரா- ஆகாஷ் தீப்...

இந்நிலையில் பாலோ ஆனை தவிர்க்க 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இதற்காக பும்ரா- ஆகாஷ் தீப் ஜோடி போராடினர். இவர்களது போராட்டம் வீண் போகவில்லை. இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்துள்ளது.

9 விக்கெட்களை....

இதனையடுத்து போதிய வெளிச்சம் இல்லாததால் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பும்ரா 10 ரன்களுடனும் ஆகாஷ் 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

உற்சாக வரேவேற்பு...

பாலோ ஆன் தவிர்த்த சந்தோசத்தில் பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த பந்தை ஆகாஷ் தீப் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனை ஓய்வு அறையில் இருந்த விராட் கோலி ஆச்சரியமுடன் பார்த்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிச்சமின்மை காரணமாக 4-வது நாள் போட்டி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து வெளி வந்த பும்ரா- ஆகாஷ் தீப்புக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டிராவை நோக்கி....

பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்கும். இதனால் ஒரு நாள் முடிவில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய விஷயாமாக இருக்காது. இப்போது பாலோ ஆனை தவிர்த்ததால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணி தான் பேட்டிங் செய்யும். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லும்.

துள்ளி குதித்த காம்பீர் - கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்தது. இதனை ஓய்வு அறையில் இருந்த கவுதம் காம்பீர், கோலி சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். அவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். வெற்றி பெற்றது போல ஒரு மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து