முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமியின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி பெற்றோரிடம் நிவாரணத்தொகையை நேரில் வழங்கினார்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      தமிழகம்
ponmudi 2025-01-04

Source: provided

விக்கிரவாண்டி: கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமியின் உடலுக்கு அமைச்சர் பொன்முடி அஞ்சலி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தி பெற்றோரிடம் ரூ.3 லட்சம் நிவாரணத்தொகையை வழங்கினார்.

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது சிறுமி லியோ லட்சுமி பலியானதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சிறுமியின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார். சிறுமி பலியான சம்பவம் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு யாருக்காவது அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து