முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தல்: காரைக்குடி எம்.எல்.ஏ.வின் மனைவி வெற்றியை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, 4 ஜனவரி 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற காரைக்குடி எம்.எல்.ஏ.வின் மனைவி பெற்ற வெற்றியை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து அவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்தலில் காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவியும், பிரியதர்ஷினி என்பவரும் போட்டியிட்டனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் 62 வாக்கு வித்தியாசத்தில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாகவும் அவருக்கும் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து தேவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, தேவியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேவி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் அமர்வு, காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தேவியின் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ரத்து செய்து, தேவியின் வெற்றி செல்லும் என்று தெரிவித்தது.

இதனிடையே பிரியதர்ஷினி சார்பில் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் மீண்டும் விசாரித்தது. மனுதாரர் பிரியதர்ஷினி சார்பில் அ.ராஜராஜன் ஆஜராகி, வாக்குகள் முழுமையாக எண்ணப்படாத நிலையில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியை பரிசீலனை செய்யாமல் வெற்றி செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததை மாற்றியமைக்க வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு பிரிதர்ஷினியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து