முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் உடல்நலக்குறைவு: மதுரை எம்.பி. வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
Venkatesan 2025-01-05

Source: provided

விழுப்புரம் : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் மாநாட்டு நிகழ்வுகள் முடிவடைந்த நிலையில், நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு இந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் சென்ற கட்சியினர், அவரை உடனடியாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோன்று சென்னை மத்திய மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் செல்வா என்பவரும் நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து