முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் நிலவும் அதி பனி மூட்டம்: 3-வது நாளாக விமானங்கள், ரயில்களின் சேவை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      இந்தியா
Delhi 2024-11-17

Source: provided

புதுடெல்லி : தேசிய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக எதிரிலிருப்பது தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டெல்லியில் சுமார் ஒன்பது மணிநேரத்துக்கு அடர் பனி நீடித்தது. இந்த ஆண்டின் பனி காலத்தின் மிக நீண்ட பனி தொடர்பான இடையூறு இது. டெல்லியின் பாலத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சுமார் 9 மணி நேரம், எதிரில் இருப்பவர்கள் தெரியாதபடி பனிமூட்டம் நீடித்தது. நகரத்தின் பிரதானமான வானிலை நிலையமான சஃப்தர்ஜங், எட்டு மணி நேரம் காட்சித் தெளிவின்மை நீடித்ததாக பதிவு செய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

கடுமையான பனி மூட்டம் காரணமாக விமானங்கள், ரயில் சேவைகளில் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டது. 81 ரயில்கள் தாமதமாக சென்றன, அவைகளில் சில எட்டு மணிநேரம் தாமதத்தில் சென்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து