முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கர்நாடகாவில் டி.எஸ்.பி. கைது

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      இந்தியா
Jail

Source: provided

கர்நாடகா : கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறை டி.எஸ்.பி. கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள ம‌துகிரியின் காவல் துறை துணை கண்காணிப்பாளராக இருப்பவர் ராமச்சந்திரப்பா (50). கடந்த வாரம் மதுகிரியைச் சேர்ந்த 36 வயதான பெண் ராமசந்திரப்பாவை காவல் நிலையத்தில் சந்தித்து நிலத் தகராறு தொடர்பான புகாரை அளித்தார்.

அப்போது அவர் அந்த பெண்ணை தனது ஓய்வறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து டி.எஸ்.பி. ராமசந்திரப்பா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கர்நாடக காவல் துறை டிஜிபி அலோக் மோகன், மதுகிரி டி.எஸ்.பி. ராமசந்திரப்பாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க துமகூரு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ராமசந்திரப்பா மீது வழக்கு தொடர்ந்து, அவரை கைது செய்தன‌ர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து