முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜனவரி 2025      தமிழகம்
Election 2024-04-08

Source: provided

சென்னை : தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், விலாசம் மாறுதல் என தமிழகம் முழுவதும் 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதன் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உட்பட பணிகளை மேற்கொண்டனர்.

அதன் பிறகு, அக்டோபர் 29-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 28-ம் தேதி வரை பெறப்பட்டது. இக்காலகட்டத்தில் கடந்த நவம்பர் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 4 நாட்கள் முகாமிலும் சேர்த்து, பெயர் சேர்க்க 8,38,016, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1,19,701 மற்றும் திருத்தம் மேற்கொள்ள 4,42,111 என 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து