முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிஃபோர்னியாவில் காட்டுத்தீ: 97-வது ஆஸ்கர் விருது தேர்வுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      உலகம்
Oscar 2025-01-09

Source: provided

கலிஃபோர்னியா: கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் ஆஸ்கர் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

97-வது ஆஸ்கர் விருதுக்கான விருதுப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வழக்கமாக வருகிற 17-ம் தேதி அறிவிக்கப்படவிருந்தது. கலிஃபோர்னியா காட்டு தீ விபத்தினால் வருகிற 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்கர் அகாதமி சி.இ.ஓ. பில் க்ராமர் அகாதமி உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அந்த மின்னஞ்சலில், தெற்கு கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எங்களது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது அகாதாமி உறுப்பினர், உடன் வேலை செய்பவர்கள் பலர் லாஸ் ஏஞ்சலீஸில் வசிக்கிறார்கள். நாங்கள் உங்களை நினைத்துக்கொள்கிறோம்  எனக் கூறப்பட்டுள்ளது. வருகிற 14-ஆம் தேதி வரை வாக்கெடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக  கடந்த 8 முதல் வருகிற 12 வரை கிட்டதட்ட 10,000 அகாதமி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

2025  ஆஸ்கர் அகாதமி விருதினை கோனோ ஓ பிரைன் மார்ச் 2-ம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் டால்பி திரையரங்கில் தொகுத்து வழங்கவிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு ஹாலிவுட் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக லாஸ் ஏஞ்சலீஸ் பகுதிகளில் பரவியதாக 1 லட்சம் மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து