முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ஜோகோவிச் - சபலென்கா முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2025      விளையாட்டு
jokovic 2023 06 12

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச்சுற்றில் மோதினர். முதல் செட்டில் 4-6 என அல்கராஸ் வெல்ல அடுத்த 2 சுற்றுகளில் ஜோகோவிச் அதிரடியாக 6-4, 6-3 என வென்றார். அதேபோல் சபலென்காவும் முன்னேறியுள்ளார்.

அபார வெற்றி

நான்காவது செட்டில் முதலில் ஜோகோவிச் முன்னிலை வகிக்க அடுத்ததாக அல்கராஸ் முன்னேறி வந்தார். பின்னர் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தி 6-4 என 4ஆவது செட்டை கைப்பற்றினார். 3 மணி நேரம் 37 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 3-1 என்ற செட்களில் அபாரமாக வென்றார். அல்கராஸ் - ஜோகோவிச் சந்தித்துக்கொள்வது இது 8-ஆவது முறையாகும். 8 ஆட்டங்களில் ஜோகோவிச் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஆஸ்திரேலிய ஓபனில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

50-வது அரையிறுதி

கடைசியாக, கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அல்கராஸை வீழ்த்தி ஜோகோவிச் தங்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. இது ஜோகோவிச்சின் 12ஆவது ஆஸி. அரையிறுதி, 50ஆவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் காலிறுதி...

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் சபலென்காவும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.

சபலென்கா வெற்றி...

பரபரப்பாக நடைபெற்ற இந்த செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில் இந்த செட்டில் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி சபலென்கா வெற்றி பெற்றார். இறுதியில் 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்திய சபலென்கா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து