முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி நா.த.க. வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாதட்சுமி மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். 

அதைபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் ஓட்டுவேட்டையாடி வருகிறார். இதற்கிடையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு டவுன், கருங்கல் பாளையம், வீரப்பன்சத்திரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் வேட்பாளர் சீதாலட்சுமி தனது கட்சியினருடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர்கள் அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து