முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஷ்பா 2 இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
raid

Source: provided

ஐதராபாத்: 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து இயக்குனர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.1850 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று 'புஷ்பா 2' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 'புஷ்பா 2' படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின் போது இயக்குனர் சுகுமார் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. அவர் விமான நிலையத்தில் இருப்பது தெரிந்து அங்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து சோதனை நடத்தியிருக்கிறார்கள். பல மணிநேரம் சோதனை நடந்திருக்கிறது. அந்த சோதனையின் போது என்ன சிக்கியது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து