முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டறை தொழிலாளி உயிரிழப்பு: உண்மை நிலையை கண்டறிய ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      தமிழகம்
OPS 2024-11-11

Source: provided

சென்னை : பட்டறை தொழிலாளி காவல் நிலையம் வாசலில் உயிரிழந்த சம்பம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்பம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை, ஆர்.கே. நகர் காவல் நிலையத்தின் முன் ராஜன் என்கிற பட்டறை தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜன் என்பவர் ஸ்டீல் பட்டறையில் பணியாற்றி வந்ததாகவும், அங்கு அவருக்கும் வேறு ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்த நிலையில் மது அருத்தியதாகவும், அங்கு அவரை ஏற்கெனவே தகராறில் ஈடுபட்டவரும், வேறு ஒருவரும் தாக்கியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதனைப் பதிவு செய்ய காவல்துறை மறுத்த நிலையில் அன்று இரவு காவல் நிலையம் முன்பு தீக்குளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ராஜன் என்பவரின் உறவினர்கள் கூற்று வேறுவிதமாக உள்ளது. கடந்த மாத இறுதியில், ராஜன் என்பவர் மது அருத்திவிட்டு தெருவில் நின்று கொண்டிருந்ததாகவும், இதனை வீடியோ எடுத்த காவலர் ஒருவர் அவரிடம் 3 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், பணம் இல்லை என்று கூறியதால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் அவரது உறவினர்கள் காவல் நிலையம் சென்று ராஜனை இல்லத்திற்கு அழைத்து வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து ராஜன் வேலை செய்யும் பட்டறைக்குச் சென்று காவல்துறையினர் அவரை அவமானப்படுத்தியதாகவும், இதன் காரணமாக ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு அவர் தீக்குளித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எப்படிப் பார்த்தாலும், காவல்துறையினரின் நடவடிக்கைதான் பட்டறை தொழிலாளி உயிரிழப்புக்கு காரணம் என்பது தெளிவாகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ராஜன் தீக்குளித்ததற்கு தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகமும், காவல்துறையை தி.மு.க. அரசு சுதந்திரமாக செயல்பட விடாததும்தான் காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து உயிரிழந்த பட்டறை தொழிலாளியை அந்த நிலைமைக்கு ஆளாக்கியது யார் என்பதை கண்டறிந்து, அதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களிலாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து