முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க புதிய கட்டுப்பாடு உணவு பாதுகாப்பு துறை அறிவிப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      ஆன்மிகம்
palani

பழனி, பழனிமலை முருகன் கோவிலில் அன்னதானத்துக்கு புதிய கட்டுப்பாடை உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். போகர் இந்தத் தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 11-ம் தேதி தை பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சுவாமி தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.

மேலும் பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகப் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளைச் சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை முருகப்பெருமானுக்கு செலுத்துவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது.

பாத யாத்திரைக்குச் செல்வோருக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் தக்க அனுமதியைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையான அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோருக்கு ரூ.1 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து