முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமஸ் பாச் - ஜெய்ஷா சந்திப்பு

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      விளையாட்டு
Jaysha 2024-05-10

Source: provided

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவர் ஜெய் ஷா. இவர், நேற்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச்சை சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் சந்தித்து பேசினார். வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. அதை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

__________________________________________________________________________

தீவிர பயிற்சியில் ரோகித் சர்மா 

ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிராக இன்று (ஜன. 22) மும்பை அணி விளையாடவுள்ளது. ரஹானே தலைமையிலான இந்த அணியில் ரோகித் சர்மா விளையாடவுள்ளதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மும்பை அணி வீரர்களுடன் தீவிர வலைப் பயிற்சியில் ரோகித் சர்மா ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் ஆஸ்திரேலியா பயணித்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி தோல்வியை சந்தித்தது.

இதில், முதல் டெஸ்ட்டில் ரோகித் சர்மா விளையாடவில்லை, 2-வது டெஸ்ட்டில் 9 ரன்கள், 3-வது டெஸ்ட்டில் 10 ரன்கள், 4-வது டெஸ்ட்டில் 12 ரன்கள் என மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், கடும் விமர்சனத்துக்கு உள்ளானதை தொடர்ந்து 5-வது டெஸ்ட்டில் இருந்து ரோகித் சர்மா விலகியது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________

போட்டி குறித்து ஜோஸ் பட்லர்

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பட்லர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் மிகப்பெரிய தொடராக இருக்கப்போகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்படும். அவர்களுக்கு எதிரான இந்த தொடரை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். போட்டி அட்டவணை குறித்து பெரிதாக கவலையில்லை. இந்த டி20 தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கப்போகிறது என நினைக்கிறேன்.

இந்திய அணிக்கு எதிராக சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளோம். அந்த போட்டிகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிக அளவிலான டி20 போட்டிகளில் விளையாடுவது, இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து