முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி: ஸ்வியாடெக் - மேடிசன் கீஸ் மோதல்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      விளையாட்டு
USA 2025-01-22

Source: provided

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இகா ஸ்வியாடெக் முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார். 

மெல்போர்னில்... 

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார்.

தொடக்கம் முதலே...

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த மேடிசன் கீச், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களில் அபாரமாக விளையாடினார்.

இதன் மூலம் 2வது மற்றும் 3வது செட்டை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் கைப்பற்றினார். இதன் மூலம் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்திய மேடிசன் கீஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர் கொள்ள உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து