முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வீரர்களின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் கட்டாயம்: ஐ.சி.சி. விளக்கம்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை தான்  அனைத்து அணிகளும் அணிய வேண்டும் என்று ஐ.சி.சி. நிர்வாகி தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பெயர் அச்சிட விலக்கு...

இந்திய அணி வீரர்கள் அணியும் ஜெர்சி, விளையாட்டு ’கிட்’களில் ஹோஸ்ட் நாடுக்கான இடத்தில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) மறுப்பு தெரிவித்ததாகவும், துபாயில் இந்திய அணிக்கான போட்டிகள் நடைபெறுவதால் பாகிஸ்தான் பெயரை அச்சிட விலக்கு கோரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கட்டாயம் பொறிக்க...

இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர், இந்திய அணி துபாயில் விளையாடினாலும், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் பெயரை தொடருக்கான இலட்சினையுடன் வீரர்களின் ஜெர்சி, கிட்களில் கட்டாயம் பொறிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து