முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5 ஆயிரம் கோடி மகனுக்கு திருமணமா? - கௌதம் அதானி விளக்கம்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
adani 2025-01-03

Source: provided

மும்பை : ஜீத் அதானியின் திருமணம் பெரும் பொருள் செலவில் நடைபெறவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்தாண்டு ஜூலை மாதம் விமரிசையாக நடைபெற்றது. உலகளவில் பேசுபொருளாக இருந்த ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், சுமார் ரூ. 5,000 கோடி  செலவில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியின் மகன் ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா திருமணமும் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியைப்போல பெரும் பொருள் செலவில் விமரிசையாக நடைபெறும் என்று சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தனது மகனின் திருமணம் சாதாரண மக்களின் வீட்டில் நடைபெறுவதைப்போலவும், குஜராத்தில் அகமதாபாத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதியில் பாரம்பரிய முறையில் நடைபெறவிருப்பதாகவும் கௌதம் அதானி தெரிவித்துள்ள்ளார்.

ஜீத் அதானியின் திருமணம் குறித்து கௌதம் அதானி தெரிவிப்பதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. ஜீத் அதானி திருமணத்தில் பிரபல பாடகர்கள் டெய்லர் ஸ்விஃப்ட், டிராவிஸ் ஸ்காட், ஹனி சிங் உள்பட பிரபல அமெரிக்க நட்சத்திரங்களான கைலி ஜென்னர், கெண்டல் ஜென்னர், செலினா கோம்ஸ், சிட்னி ஸ்வீனி உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

மேலும், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் போக்குவரத்துக்காக 1,000-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும், சமையல் பணிக்கு 58 நாடுகளைச் சேர்ந்த பிரபல சமையல் வல்லுநர்களும் வரவிருப்பதாக வதந்திகள் பரவின. அதுமட்டுமின்றி, 20,000 முதல் 50,000 கலைஞர்கள் சேர்ந்து, அல்லிப் பூக்களாலான ரங்கோலியை உருவாக்கி சாதனை படைக்க விருப்பதாகவும், திருமண நாள் இரவில் பெரியளவிலான ட்ரோன் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவிருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து